ஆரணி அருகே மாற்றுத்திறனாளிகள் நியாய விலை கடையை முற்றுகையிட்டு போராட்டம்

ஆரணி அருகே மாற்றுத்திறனாளிகள் நியாய விலை கடையை முற்றுகையிட்டு போராட்டம்
X

மாற்றுத்திறனாளிகள் நியாயவிலை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆரணி அருகே மாற்றுத்திறனாளிகள் நியாயவிலை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா இரும்பேடு கிராமத்தில் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் மாற்றுத்திறனாளி பொருட்கள் வாங்க சென்றபோது வரிசையில் வந்தால்தான் பொருட்கள் வழங்கப்படும் என்று நியாயவிலைக் கடை ஊழியர் தெரிவித்தார். அதற்கு நான் மாற்றுத்திறனாளி என்று சொன்னதற்கு போய் சர்டிபிகேட் எடுத்துட்டு வா அப்போது தான் கொடுப்பேன் என்று நாய விலை கடை ஊழியர் மாற்றுத்திறனாளியை கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது.

உடனடியாக மாற்றுத்திறனாளி தனது சங்க நிர்வாகிகளிடம் முறையிட்டார். இதனை தொடர்ந்து இன்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக.நியாய விலைக் கடை முற்றுகை போராட்டம் நடைபெற்றது . இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு, கிளைத் தலைவர் ஆறுமுகம் , கிளை செயலாளர் நாகமணி , கிழக்கு ஆரணிஒன்றிய செயலாளர் திவ்யா, ஒன்றிய துணைத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர் சந்திரசேகர் கலந்து கொண்டனர்.

பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனிவரிசை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு மாற்று திறனாளிகள் கலைந்து சென்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!