அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா..!
அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
விழாவில் தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்ற தலைப்பில் பாரம்பரிய உணவான கேழ்வரகில் செய்யப்பட்ட கூழ், களி, அடை, புட்டு அனைத்து வகை கீரைகள் ,மருத்துவ குணம் உள்ள தானியங்களை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பாரம்பரிய உணவை தயாரித்த மாணவிகளையும், சமூக அறிவியல் ஆசிரியர்கள் வித்யா ,பூங்கோதை, மணிகண்டன் ஆகியோரையும் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள் .
மேலும் மாணவிகளுக்கு, இரும்புச் சத்து மிக்க உணவின் அவசியத்தை எடுத்துக் கூறினார்கள்.
நிகழ்ச்சியில் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா
பெரணமல்லூா் ஒன்றியம், மோரக்கணியனூா் ஆா்.சி.எம் தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா நடைபெற்றது
நிகழ்வுக்கு, மோரக்கணியனூா் ஊராட்சி மன்றத் தலைவா் மனியப்பன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சேவியா் வரவேற்றாா்.
இதில், வட்டார கல்வி அலுவலா் குணசேகரன் பாட புத்தகம், நோட்டு புத்தகம், எழுது பலகைகள் ஆகியவற்றை கற்போருக்கு வழங்கினாா். முன்னதாக, கிராமத்தை 100 சதவீதம் எழுத்தறிவு கிராமமாக மாற்ற வேண்டும் என்று உறுதி மொழியேற்றனா்.
நிகழ்வில், இல்லம் தேடி கல்வி இயக்க தன்னாா்வ தொண்டா் மீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், உதவி ஆசிரியா் ஆரோக்கியமேரி நன்றி கூறினாா்.
இதேபோல, இராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளி தலைமையாசிரியை தாமரைச்செல்வி வரவேற்றாா். இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலா் அருணகிரி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
இதில், ஆசிரியா்கள் சசிகலா, நளினி, மகேஸ்வரி, வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், கற்போருக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu