ஆரணியில் தமிழக வணிகர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம்
ஆரணியில் நடைபெற்ற, தமிழக வணிகர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம்.
தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். நேற்று மாலை ஆரணியில், மாவட்ட தலைவர் எஸ்.ராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் வணங்காமுடி, மாவட்ட பொருளாளர் ஏழுமலை, நகரத் தலைவர் விஜயகுமார், நகர செயலாளர் ரவி, நகர பொருளாளர் எம்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடார் அமைப்பின் மாவட்ட நிர்வாகி ஆர்.ரமேஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ். சவுந்தரராஜன் என்ற ராஜா, மாநில பொதுச் செயலாளர் கே.தேவராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் பி.தேவராஜ், மாநில செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி, வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜன், வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இக்கூட்டத்தில், மே 5-ந் தேதி சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள கூவத்தூரில் நடைபெறும் தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மாநாட்டில் அனைத்து உறுப்பினர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து வருவாய்மிக்க தாலுகாவாக உள்ள ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என ஆரணி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இக்கோரிக்கையை வணிகர் தின மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு பரிந்துரை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஆரணி, போளூர், ஜமுனாமுத்தூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அனைத்து வியாபார சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu