ஆரணி புதிய மாவட்டம் அமைக்கக்கோரி வியாபாரிகள் போராட்டம்

ஆரணி புதிய மாவட்டம் அமைக்கக்கோரி வியாபாரிகள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக்கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிக அளவில் வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி விளங்குகிறது. பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் 2-வது பெரிய நகரமாக உள்ள ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்கக்கோரி, ஆரணி சேத்துபட்டு, கண்ணமங்கலம், பெரணமல்லூர் ஜமுனாமுத்துர் உள்ளிட்ட பகுதி அனைத்து சங்க வியாபாரிகள் ஒன்றுணைந்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டடனர்.

ஆரணியை தலையிடமாக கொண்டு மாவட்ட வேண்டும் என கோஷங்கள் எழுப்பியும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!