வர்த்தகர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்: ஆட்சியர்

வர்த்தகர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்: ஆட்சியர்
X

கொரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகளின் கடைக்கு சீல் வைக்கும் அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்ட வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் ஆக.31-க்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆரணியில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத வியாபாரிகளின் கடைகளை பூட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆவணத்தை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai marketing future