திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வணிகர் நல சங்கத் தலைவர் உயிரிழப்பு
X
By - S.R.V.Bala Reporter |19 May 2021 1:45 PM IST
ஆரணியில் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வணிகர் நல சங்க தலைவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர் குமார், திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வணிகர் நலசங்க தலைவராகவும், மாவட்ட குளிர்பான சங்கத் தலைவராகவும் பல்வேறு சமூக தொண்டுகளையும் சமூக சிந்தனையோடு செய்துவந்தார்.
கடந்த சில தினங்களாக நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது ஆரணி வட்டத்தில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் என அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கொரோனா தொற்று முதல் அலையின் போது ஏழைஎளிய மக்கள் ஏராளமானோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu