திருவண்ணாமலை ஆரம்ப சுகாதார மையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

திருவண்ணாமலை ஆரம்ப சுகாதார மையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
X

திருவண்ணாமலை மேல்நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் உலக தாய்ப்பால் வாரவிழாவை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மேல்நகர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்நகர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி தலைமையில் விழா நடைபெற்றது.

இதில் மேல்நகர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு குழந்தைகளின் வளர்ச்சி குறித்தும் தாய்மார்களின் உடல் ஆரோக்கியத்தை குறித்தும் உணவுகள் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான ஆலோசனைகளை பெற்றனர்.

தாய்ப்பால் வார விழாவில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று உணவுகள் காய்கறிகள் பழ வகைகள் பார்வைக்கு வைத்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் சத்து பாயாசங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil