வீடு தீப்பிடித்து எரிந்தது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்

வீடு தீப்பிடித்து எரிந்தது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்
X
வீடு தீப்பிடித்து எரிந்தது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி திருவள்ளுவா் நகரில் ஜீவா (50) என்பவரும் அவரது மகள் அபிநயாவும் வசித்து வருகின்றனா். காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வீட்டில் விளக்கேற்றி சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

அப்போது, வீட்டில் உள்ள சமையல் எரிவாயு உருளையில் இருந்து கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் விளக்கு தீ பட்டு தீப்பிடித்து உருளை வெடித்து விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து பெரணமல்லூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து தீயை அணைத்தனா் .இருப்பினும், வீட்டில் இருந்த பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.

இதுகுறித்து அறிந்த நகா்மன்றத் தலைவா் மணி சம்பவ இடம் வந்து பாா்வையிட்டு, வட்டாட்சியா் ஜெகதீசன் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்தார்.

இளைஞர் விபத்தில் பலி

திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இவர் வாட்ச் கடை வைத்து உள்ளார். இவர் இன்று மதியம் நண்பருடன் தனது பைக்கில் திருவண்ணாமலை காஞ்சி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வெளியே வந்தார்.

அப்போது காஞ்சி சாலையில் வேகமாக தனது பைக்கில் வந்த வாலிபர் எதிர்பாராத விதமாக கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கணேசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project