ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாற்காலி வெளியே வீச்சு
அலுவலக வாசலில் எறியப்பட்ட நாற்காலி.
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பொது நிதியின் மூலமாக 17 வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.83 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு நேற்று (வியாழக்கிழமை) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாளின் கணவர் சீனிவாசன் சொல்லும் நபருக்கு மட்டுமே பணிகளை செய்ய டெண்டர் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவ்வாறு ஒன்றிய குழு தலைவரின் கணவர் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய குழு துணை தலைவருககு ஆதரவாக, பா.ம.க. உறுப்பினரர் ஏழுமலை அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவரின் கணவர் சீனிவாசன் அமர்வதற்காக போடப்பட்டிருந்த இருக்கையை அலுவலக வெளி வளாகத்தில் தூக்கி வீசினார்.
பாமகவை சேர்ந்த துணைத் தலைவர் வேலாயுதத்துக்கும் ஒன்றிய குழு தலைவருக்கும் நிர்வாக ரீதியாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது
17 பணிகளுக்கு டெண்டர் விடுவதற்காக ஷெட்யூல் வழங்குவதற்கான கடைசி நாளையொட்டி 16 பணிகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கண்ணமங்கலம் நகரில் இந்து ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தின் மேற்்கூரை புனரமைப்பு செய்யும் பணியை ஒன்றிய குழு துணை தலைவர் ஆ.வேலாயுதம், அவரது ஆதரவாளரான மணிகண்டனுக்கு வழங்க வேண்டும் என பரிந்துரைத்ததாக வருகிறது.
அதேபோல ஒன்றிய குழு தலைவரின் கணவரான சீனிவாசன் தனது ஆதரவாளரான ரமேேஷுக்கு அந்த பணியை வழங்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து ஒன்றிய குழு தலைவரின் கணவர் சீனிவாசன் கூறுகையில் பணிகள் அனைத்தும் உறுப்பினர்களுக்கு சமமாக பிரித்து தருகிறோம் இதுவரை அப்படித்தான் நடந்து வருகிறது துணைத்தலைவர் வேலாயுதம் கூடுதலாக தனக்கு வேண்டப்பட்டவருக்கு பணியை தர கோரினார் என கூறினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி கூறுகையில் நாற்காலி தூக்கி வீசப்பட்ட சம்பவம் தனக்குத் தெரியாது விசாரணை செய்வதாக கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu