ஆரணி அருகே சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

ஆரணி அருகே சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு
X
ஆரணி அருகே சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் போளுர் பைபாஸ் சாலையில் ஆற்று பாலம் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ், சென்னையில் பிரபல தனியார் நகைக்கடையிலும் அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், நிதி நிறுவனத்திலும் மற்றும் முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன) மருந்தகத்தில் பணிபுரிந்து வருகின்றனர் .

இந்நிலையில் மூன்று நண்பர்களும் இரவு ஆரணி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேனீர் அருந்திவிட்டு சரண்ராஜ் ராஜேஷ் ஆக இருவரும் முள்ளிப்பட்டியில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு சென்று மணிகண்டனை வீட்டிற்கு விட்டு வர ஒரே இருசக்கர வாகனத்தில் பைபாஸ் சாலையில் சென்றுள்ளனர். பைபாஸ் சாலையில் உள்ள பாலம் அருகே செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதி மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் துடிதுடித்து ப உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் மூன்று பேர் சடலத்தைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இரவு முழுவதும் பைபாஸ் சாலையில் சென்ற வாகனங்களில் எந்த வாகனம் மோதியது என்று சிசிடிவி கேமரா மூலம் தேடி வருகின்றனர்.

ஆரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 இளைஞர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மனைவி சுமதி.

இவா் காய்கறி வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, விளாங்காடு கூட்டுச் சாலை அருகே சென்றபோது எதிரே வந்த காா் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சுமதியை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!