ஆரணி தனியார் பள்ளியில் முப்பெரும் விழா: புதிய நீதி கட்சி தலைவர் பங்கேற்பு

ஆரணி தனியார் பள்ளியில் முப்பெரும் விழா: புதிய நீதி கட்சி தலைவர் பங்கேற்பு
X

சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கிய ஏசி சண்முகம்

ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சியில் உள்ள ஏ சி எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சியில் உள்ள ஏ சி எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இப்பள்ளியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற முப்பெரும் கலை விழா நிகழ்ச்சி பள்ளியின் தலைவர் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் ஏ சி. அருண்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதிய நீதி கட்சி தலைவரும் ஏசிஎஸ் குழும நிறுவனருமான ஏ.சி. சண்முகம் பங்கேற்றார்.

இதில் பங்கேற்ற மாணவ மாணவிகள் பெருமாள் ஆண்டாள் மற்றும் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து அசத்தினர்.

இதனை அடுத்து பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, விழிப்புணர்வு நாடகப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை ஒட்டி பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஏசி சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பள்ளி தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு மற்றும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

மேலும் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்ற பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நிர்வாகிகள், புதிய நீதி கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!