திருவண்ணாமலை: சேத்துப்பட்டு ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
X

இருளர் சமூகத்தினருக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்

இருளர் சமூகத்தினருக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மியமங்கலம் ஊராட்சியில் இருளர் சமூக மக்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை கூடுதல் ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செம்மியமங்கலம் ஊராட்சியில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த பணியினை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் இருளர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளிடம் படிக்கும் அங்கன்வாடி மையத்தின் தொலைவு மற்றும் பள்ளியின் தொலைவு குறித்து கேட்டறிந்தார்.

தச்சாம்பாடி ஊராட்சியில் ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூபாய் 22 லட்சத்து 63 ஆயிரத்தில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கிராமப்புற நூலகக் கட்டடம், ஆகியவற்றினை கூடுதல் ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது ஒன்றிய குழுத்தலைவர் ராணி அர்ஜுனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி