ஆரணியில் நடந்த வாகன தணிக்கையை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் ஆய்வு

ஆரணியில் நடந்த வாகன தணிக்கையை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் ஆய்வு
X

ஆரணியில் வாகன தணிக்கையை , மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த வாகன தணிக்கையை மாவட்ட போலீஸ் எஸ்.பி. கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பழைய பஸ் நிலையம், மணிக்கூண்டு அருகில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

இந்த வாகன தணிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நம்பர் பிளேட் எழுதாத வாகனங்களையும், வெளிமாவட்ட வாகனங்களையும், ஓட்டுனர் உரிமம் இல்லாத வாகனங்களையும், அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த வாகனங்களையும், சந்தேகம் உள்ள நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

முறையான ஆவணங்கள் இருந்தவர்களை அனுப்பினர். இல்லாதவர்களுக்கு அபராதத்தொகை விதித்து ரசீதுகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து எஸ்பி கார்த்திகேயன் கூறுகையில்.

மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டி வந்தால் அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், திருட்டு சம்பவங்களை குறைக்கும் வகையில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தை ஓட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!