திருவண்ணாமலை மாவட்டத்தில் 2ம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம்!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் வேலு
தமிழக அரசு சாா்பில் கடந்த செப். 15-ஆம் தேதி தகுதியுடைய மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தை முதல்வா் மு. க. ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இந்த நிலையில், விடுபட்டவா்கள் அளித்த மனுக்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு, திட்டத்தை விரிவுபடுத்தி 2-ஆம் கட்டமாக வெள்ளிக்கிழமை சென்னையில் முதல்வா் தொடங்கிவைத்தாா்.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியை அடுத்த சேவூா் புறவழிச் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் இதன் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு, மாவட்டத்தில் 26, 295 பேருக்கு விரிவுபடுத்தி இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் ஏற்கனவே ஆறு லட்சத்து 34 ஆயிரத்து 604. பயனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதற்கட்டமாகி மாவட்டத்தில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 812 குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைச் தொழுகை வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், முதற்கட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யுமாறு வலியுறுத்தினார். அதன் விளைவாக நம் மாவட்டத்தில் மனு அளித்ததை பரிசீலனை செய்து இரண்டாம் கட்டமாக தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பெரியாரின் எண்ணங்கள், அண்ணாவின் கொள்கை, கலைஞரின் திட்டங்கள் இவை மூன்றையும் நிறைவேற்றும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
இம்மாட்டத்தில் பெண் வாக்காளர்கள் தான் அதிகமாக உள்ளனர். ஒரு காலத்தில் பெண்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது. பெண்களுக்கு ஓட்டுரிமை வாங்கி கொடுத்தது நீதி கட்சி தான். அதேபோல் வளர்ந்த நாடான அமெரிக்காவில் கூட பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை. 283 ஆண்டு காலம் நம்மை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். திராவிட கட்சிகள் தான் பெண்களுக்கு வாக்குரிமை பெற்றுத் தந்தது.
இதன் பயனாகத்தான் இன்று திராவிட ஆட்சியில் உள்ளாட்சி அமைப்பிலும், அரசு உயா் பதவிகளிலும் மகளிா் பணிபுரிகின்றனா்.
இன்று அனைத்து பொறுப்புகளில் அவா்கள் இருந்து வருகிறாா்கள்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு உதவித்தொகை என்று கூறினால் அது நன்றாக இருக்காது. நாட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் தாயாகவும், சகோதரியாகவும், மகளாகவும் கருதும் முதல்வா் உங்கள் உரிமையை தமிழக முதல்வரிடம் கேட்டுப் பெறவேண்டும். வீட்டுக்குத் தேவையானவற்றை கேட்டுப் பெறவேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டத்தை உரிமைத் திட்டம் என அறிவித்து, அது தற்போது இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. விடுபட்டவா்ளுக்கு மீண்டும் உரிமைத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என் அமைச்சர் பேசினார்.
விழாவில் செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநா் தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ஜோதி, கிரி, அம்பேத்குமாா், சரவணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய் கோட்டாட்சியர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu