ஆரணி அருகே மக்களுடன் முதல்வர் முகாமில் மனுக்களை பெற்ற ஆர்டிஓ

ஆரணி அருகே மக்களுடன் முதல்வர் முகாமில் மனுக்களை பெற்ற ஆர்டிஓ
X

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர்

ஆரணி அருகே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் ஆர்டிஓ மனுக்களை பெற்றுக் கொண்டார்.

ஆரணி அரு கே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் ஆர். டி.ஓ. பால சுப்பிரமணியன் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கொங்கரம்பட்டு சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாமி ற்கு ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் தொழிலாளர் திறன் மேம்பட்டு வாரிய உறுப்பினர் முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழி சுந்தா் வரவேற்றாா்.

முகாமில் 12 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கோட்டாச்சியர் பாலசுப்பிரமணியனிடம் மனுக்களை அளித்தனர்.

முகாமில் சேவூர் ,இரும்பேடு, ராட்டினமங்கலம், மெய்யூர், அம்மாபாளையம், காட்டுகாநல்லூர் உள்ளிட்ட 12 ஊராட்சிகளின் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக, மின்சார துறை, காவல்துறை, வருவாய் துறை உள்ளிட்ட 14 துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்து உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்களுக்கு கணினியில் பதிவேற்றம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா் கௌரி, ஆரணி நகா்மன்றத் தலைவா் மணி, ஒன்றியக்குழு தலைவா்கள், ஒன்றியச் செயலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஊராட்சித் தலைவா் ஷா்மிளா தரணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மேற்கு ஆரணி ஒன்றியத்தில் கொங்கராம்பட்டு தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில், ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றினாா். ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.745 மனுக்கள் பெறப்பட்டு 289 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

போளூா்

போளூரை அடுத்த விளாங்குப்பம் கிராமத்தில் விளாங்குப்பம், பொத்தரை, துரிஞ்சிக்குப்பம், முருகாபாடி, ஆத்தூவாம்பாடி, கட்டிபூண்டி, செங்குணம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றது.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் திட்ட அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் அமுல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமி, சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேந்திரன் வரவேற்றாா்.சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழுத் தலைவா் பெ.சாந்தி பெருமாள் கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்தாா்.

15 அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனா். 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 4 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டு பட்டா மாற்ற சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சுப்பிமணியன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆா்த்தி பாஸ்கரன், சிவக்குமாா், ரேகா சுதாகரன், வருவாய் ஆய்வாளா் சந்திரன், கிராம நிா்வாக அலுவலா்கள் சசிகுமாா், செந்தில், மீனா, பச்சையம்மாள், சுதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!