டீக்கடையில் போண்டா போட்டு வாக்கு சேகரித்த அமைச்சர்

டீக்கடையில் போண்டா போட்டு வாக்கு சேகரித்த அமைச்சர்
X

டீக்கடையில் போண்டா போட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் மஸ்தான் உடன் வேட்பாளர் தரணி வேந்தன்

டீக்கடையில் போண்டா போட்டு கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அமைச்சர் மஸ்தான்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் செஞ்சு மஸ்தான் டீ கடையில் டீ போட்டுக் கொடுத்தும் போண்டா போட்டு கொடுத்தும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட செஞ்சி , மயிலம் , செஞ்சி நகர பகுதியில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தரணி வேந்தன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் , கிறிஸ்துவ தேவாலயம், வணிகர் சங்கப் பிரதிநிதிகள், தமிழ்நாடு ஜமாத் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், திமுக ஒன்றிய கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு சேகரித்து வருகிறார்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளிமேடு பட்டை பகுதியில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் , ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அங்குள்ள ஒரு டீ கடைக்கு திடீரென சென்ற அமைச்சர் டீ போட்டுக் கொடுத்தும், போண்டா போட்டுக் கொடுத்தும் அங்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தும் நூதன முறையில் வாக்கு சேகரித்தார். இது டீக்கடைக்கு வந்திருந்த வாக்காளர்களை வியப்பில் ஆழ்கியது.

தொடர்ந்து பரோட்டா மாவு தட்டிக் கொடுத்து அதனை சுடுவது போன்ற பணிகளை செய்து வாக்காளர்களை கவர்ந்தார் செஞ்சி மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து பின்னர். பஜார் வீதியில் அங்கிருந்த கடைகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதை அடுத்து திமுக ஒன்றிய நிர்வாகிகளை சந்தித்த அவர் நாடாளுமன்றத் தேர்தலில் நமது சக்தியை நிரூபிக்கும் வகையில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுமாறும், நமது தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செய்துள்ள நலத்திட்டங்களையும் சாதனைகளையும் வாக்காளர்களுக்கு விளக்கி கூறி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.

Next Story
பசும் பாலில் இவ்வளவு நன்மைகள் இருக்கா ? இது தெரிஞ்சா இனி கடைல பாக்கெட் பால் வாங்க மாட்டிங்க !..