பலூன்களை பறக்க விட்டு வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
பலூன்களை பறக்க விட்டு வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
இந்திய மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி தேர்தல் திருவிழாவாக கொண்டாடப்பட்டது, கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
இதில், சிலம்பாட்டம் நடைபெற்று, ஆரத்தி எடுத்து ஆட்சியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கோட்டை மைதானம் அருகேயுள்ள பூக்கடை வீதியில் மாவட்ட ஆட்சியா் சீா்வரிசை மேள தாளங்களுடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கினாா். மேலும், சிலம்பாட்டம், கோலாட்டம் நடைபெற்றது. விளையாட்டு அரங்கத்தில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டு கைப்பேசி டாா்ச் லைட் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும், மூவண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. குடு குடுப்பைக்காரா்கள், நாட்டுப்புறக் கலைஞா்கள், ஒயிலாட்டம், பறை இசை கலைஞா்கள் மூலமும் தோதலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இறுதியாக வாக்காளா் உறுதிமொழி ஏற்கப்பட்டு, கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி, மாவட்ட திட்ட அலுவலா் மீனாம்பிகை, வட்டாட்சியா் மஞ்சுளா, நகராட்சி ஆணையா் சரவணன், அனைத்து குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், பணியாளா்கள் மேற்பாா்வையாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu