ஆரணியில் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் திடீர் மாயம்

ஆரணி புதுகாமூர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்த நிலையில் அவர் ஒரு நாள் கூட கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பெற்றோர் அவரை சமாதானம் செய்து வேறு மாப்பிள்ளை பார்த்தனர். அவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மணமகள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை, ஆரணி நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மணமகள் மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu