மத்திய அரசை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

மத்திய அரசை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
X

ஆரணி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் 

ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு

ஆரணி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் அதன் தலைவர் குரு ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கச்சா பட்டு ஜரிகை விலை ஏற்றத்தின் காரணமாகவும் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி தயாரிப்பு பட்டு சேலை ரகத்துக்கு ஏற்றவாறு ரூபாய் 500 முதல் 1500 வரை விலையை உயர்த்திக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி கைத்தறி தொழிலுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருவதால், ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரி வருகின்ற 7ம் தேதி ஆரணி தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க