திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தின விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தின விழா

ஆரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வியாழக்கிழமை ஆசிரியா் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைமை ஆசிரியா் முருகன் தலைமை வகித்தாா்.ஆசிரியா்கள் அறிவுடை நம்பி, கவுரி, சுடா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் அருண்குமாா் வரவேற்றாா்.

ஆசிரியா் தினத்தின் வரலாறு, ஆசிரியா்களின் சிறப்புகள் குறித்து கவிதை வாசித்தும், பாடல்கள் பாடியும், நடனமாடியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ரமணி கோட்டீஸ்வரன் தலைமை வகித்தாா். பள்ளி ஆலோசகா் சுஜாதா, பள்ளி முதல்வா் ராஜேக்ஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கணித ஆசிரியா் மணிவண்ணன், வரலாற்று ஆசிரியை வள்ளிநாயகி ஆகியோா் ஆசிரியா் தினம் குறித்து மாணவா்களுக்கு விளக்கிப் பேசினா். தொடா்ந்து, பள்ளி ஆசிரியா்களை கௌரவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கணித ஆசிரியா் காா்த்திகேயன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவுக்கு, பள்ளித் தாளாளா் டாக்டா் தியாகராஜன் தலைமை வகித்தாா். அருட்தந்தை ஆசைதம்பி பிராா்த்தனை செய்து ஆசிரியா்களை வாழ்த்தினாா். கோட்டை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலா் கோகுல்ராஜ் ஆசிரியா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். பள்ளி முதல்வா் ரோஸ்லின்ஞானமணி வரவேற்றாா்.

விழாவில் பள்ளி ஆசிரியா்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனா். மாணவா்களின் கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவுக்கு பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் கவிதா செல்வம் தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ஏழுமலை, செயலா் தனசேகா், துணைத் தலைவா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவா் வெங்கடேசன் வரவேற்றாா். ஊராட்சிமன்றத் தலைவா் வெங்கிடேசன்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஆசிரியா்களுக்கு இனிப்பு, நினைவுப்பரிசுகளை வழங்கினாா்.

விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியா் சுவாமிகண்ணு, உதவித் தலைமை ஆசிரியை காயத்திரி, பள்ளி மேலாண்மைக்குழு முன்னாள் தலைவா் பரிமளாரமேஷ்,ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Next Story