மகா தீபம்: மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

மகா தீபம்: மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
X

திருவண்ணாமலை எல்லையில் காவல்துறையினர் சோதனை

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை மகா தீப பெருவிழா நடைபெறுகிறது , இதன் காரணமாக திருவண்ணாமலை நகருக்குள் வெளியூரில் இருந்து வரும் வாகனங்களுக்கும் பக்தர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது .இதையொட்டி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .

மாவட்ட எல்லையான கண்ணமங்கலத்தில் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தீபத் திருவிழாவுக்கு வரும் வாகனங்களை மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.

அதேபோல் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!