திண்பண்டங்கள் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து

திண்பண்டங்கள் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
X

கடையில் வைக்கப்பட்டிருந்த சாமான்கள், மின்சாதன பொருட்கள், மின் வயர்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆகிய காட்சி.

கியாஸ் ரெகுலேட்டரில் ஏற்பட்ட கசிவினால் தீப்பிடித்து கரும்புகை வெளியானது. இதனை கண்டதும் அக்கம் பக்கத்தினர் கடைக்குள் வந்து சிலிண்டரை தூக்கி வீசினர்.

ஆரணி மண்டி வீதியில் தொப்பை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தின்பண்டங்களான முறுக்கு, எல்லடை, அதிரசம் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை கடையைத் திறந்து கடைக்குள் இருக்கும் கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது திடீரென தீப்பிடித்தது.

தொடர்ந்து கியாஸ் ரெகுலேட்டரில் கிராஸ் கசிவினால் தீப்பிடித்து கரும்புகை வெளியானது. இதனை கண்டதும் அக்கம் பக்கத்தினர் கடைக்குள் வந்து அங்கிருந்த சிலிண்டரை தூக்கி வெளியே வீசினர்.

மேலும் தகவல் அறிந்ததும் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) விஜயகுமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை மேலும் பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இதில் கடையில் வைக்கப்பட்டிருந்த சாமான்கள், மின்சாதன பொருட்கள், மின் வயர்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. ஆரணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!