கூடுதல் பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள்

கூடுதல் பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள்
X

பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

ஆரணி அருகே கூடுதல் பேருந்து வராததால் ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ்சில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்துக்கு பேருந்துகள் வராததால் அந்த ஊரில் படிக்கும் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே அரசு பேருந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரணியை அடுத்த ஆதனூர், கிழையூர், விருபாச்சிபுரம், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு தினமும் 200 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நகர்ப்புறத்துக்கு அரசு டவுன் பேருந்துகளில் பயணித்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆதனூருக்கு பொதுமக்களின் நீண்டநாள் கோரிகையை ஏற்று வழிதடம் எண் 14 என்ற அரசு பேருந்தை இயக்கி வந்தனர்.

அந்த அரசு பேருந்து மூலமாக பொதுமக்கள், தின கூலி தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் நகர்ப்புறங்களுக்கு சென்று பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில் ஆதனூர் கிராமத்துக்கு வந்து செல்லும் இந்த அரசு பேருந்து திடீரென முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டது.

மேலும் அந்த அரசு பேருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் கூட்ரோடு அருகில் பொதுமக்களை ஏற்றி, இறக்கி செல்கிறது.

இதுகுறித்து கிராம மக்கள் அதிகாரிகளை சந்தித்து மீண்டும் பேருந்து வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலைகள் சரியில்லை அதிகமாக குண்டும் குழியுமாக உள்ளதால் பேருந்துகள் வராது என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கிராம பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதனால் ஆதனூர் கிராம மக்கள் மற்றும் கிழையூர், விருபாச்சிபுரம், காந்திநகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆற்காடு ஆரணி செல்லும் கூட்ரோடுக்கு செல்ல மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் தினமும் காலை பள்ளி நேரங்களில் மாணவர்கள் நகர்ப்புற பள்ளிகளுக்கு செல்ல அந்த வழியாக செல்லும் மினி வேன் மற்றும் ஷேர் ஆட்டோ, கூட்ரோட்டில் இருந்து செல்லும் அரசு பேருந்து ஆகியவற்றில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு செல்கின்றனர்.

எனவே வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அரசு பேருந்துக்காக நீண்ட தூரம் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்துக் கழகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!