ஆரணியில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி

ஆரணியில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
X

பேருந்தில் ஆபத்தான நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.

ஆரணி மற்றும் தச்சம்பட்டு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி தேவை பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் மற்றும் கொங்கராம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்தும் தினமும் பள்ளி கல்லூரி பயில வேலூர் மாநகருக்கு காலையில் செல்வதும் மாலையில் பின்னர் வீடு வீடு திரும்புவர்.

அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் கொங்கராம்பட்டு பகுதியில் இருந்தும் கண்ணமங்கலம் பகுதியில் இருந்தும் செல்லும் நகர பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் படிகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் தினமும் பயணித்து வருகின்றனர்.

தங்களுடைய பிள்ளைகள் பள்ளி கல்லூரி செல்லும்போது இப்படி பயணிப்பதை கண்ட மாணவர்களின் பெற்றோர்கள் தினமும் வீடு திரும்புவதற்குள் வயிற்றில் புளியை கரைத்தால் போல் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பயணிக்கும் மாணவர்கள் ஒரு சிலர் பேருந்து படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து அடிக்கடி காயங்கள் ஏற்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் கொங்கராம்பட்டு பகுதியில் இருந்தும், கண்ணமங்கலம் பகுதியில் இருந்தும் பள்ளி கல்லூரி வேலைகளில் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும்.

மாணவர்களின் கல்வியின் நலனுக்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும் அரசு நடவடிக்கை எடுத்து போக்குவரத்து துறை கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும் அப்பகுதியில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்களை காணும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தச்சம்பட்டு

தச்சம்பட்டு பகுதிகளில் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தச்சம்பட்டு. இதனை மையமாக கொண்டு சின்னகல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, அள்ளிக்கொண்டாப்பட்டு, தலையாம்பள்ளம், நரியாப்பட்டு, சேவூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தச்சம்பட்டில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.

பள்ளிக்கு சென்று வர காலை, மாலை நேரங்களில் பஸ் வசதிகள் இல்லாததால் காலை நேரங்களில் குறித்து நேரத்திற்கு பள்ளிக்கு வரவும், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லவும் வெகு நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. வெகு நேரம் கழித்து மாணவ-மாணவிகள் வீட்டிற்கு வருவதால் பெற்றோர்கள் அச்சப்படக்கூடிய சூழல் நிலவுகறது.

மேலும் அந்த வழியாக வரும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் பஸ்களில் தொங்கியபடி செல்கின்றனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!