திருவண்ணாமலை அருகே ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள்

திருவண்ணாமலை அருகே ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள்
X

திருவண்ணாமலை அருகே ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Student Protest - திருவண்ணாமலை அருகே சேவூரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Student Protest - திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் மேல்நிலைப்பள்ளியில் 800க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த வாரம் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சிகரெட் பிடித்து புகையை உடன் படிக்கும் மாணவியின் மீது ஊதியுள்ளார். இது அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு தெரியவர அந்த மாணவனை அழைத்து கண்டித்துள்ளனர்.

இதனை எதிர்த்து அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று மாணவனை கண்டித்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என முறையிட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக ஆசிரியர்கள் ஜெ.திலீப் குமார், கே. வெங்கடேசன் ஆகிேயாரை பணியிடை நீக்கம் செய்தும், ஆசிரியர்கள் ஜெ.நித்தியானந்தம், பி.பாண்டியன் ஆகியோரை வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்தும் முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் ஆரணி சேவூர் பள்ளியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளியில் பயிலும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக கிராமத்தில் உள்ள பொதுமக்களும் சாலை மறியலில் பங்கு கொண்டனர்.

இதற்கிடையில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா தரணி, ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.டி.ராஜேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எழிலரசி சுகுமார், குமார், முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி, ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சந்தோஷ், தாசில்தார் ஜெகதீசன், பள்ளி தலைமை ஆசிரியை மீனாட்சி ஆகியோரும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

காவல்துறையினர் வந்து பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவர்கள் கலையாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் எந்த ஒரு முடிவும் எட்டப்படாததால் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் பகல் 2.15 மணியளவில் ஆயுதப்படை போலீசாருடன் அங்கு வந்து சமரசம் செய்தார். பின்னர் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து எஸ்.பி. பேசுகையில், மாணவர்களிடம் சாலை மறியல் என்ற தவறான கண்ணோட்டத்தை புதைக்க வேண்டாம். நீங்கள் முறையாக மனு கொடுங்கள். கலெக்டரிடம் பேசி உங்கள் கோரிக்கை குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார். அதன்பின் காலாண்டு தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) எழுதலாம் என கல்வித்துறை தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

மாணவர்கள் ஏந்தி இருந்த பதாகைகளில், "சமத்துவம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் பாகுபாடு பார்ப்பார்களா? தவறு செய்த மாணவனுக்கு அறிவுரை வழங்கிய ஆசிரியருக்கு தண்டனையா?" என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி