ஆரணி அருகே மூன்று நாட்களாக மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு

ஆரணி அருகே மூன்று நாட்களாக மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு
X

மாணவர்களின் புறக்கணிப்பால், வெறிச்சோடி காணப்படும் வகுப்பறைகள்.

ஆங்கில வழி கல்வி மாணவர்களை, தமிழ் வழி கல்வி பயில வலியுறுத்தியதால், மாணவர்கள் 3 நாட்களாக பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஆரணி அருகே ஆங்கில வழி கல்வியில் படித்து வரும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் திடீர் தமிழ் வழி கல்வி பயில வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டதால் மூன்று நாட்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெள்ளூர் பஞ்சாயத்தில் உள்ள துளுவ புஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் ஆங்கில வழி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி ஆரம்பப் பள்ளி என்பதால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 45 மாணவ மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்,

கடந்த 20 ஆண்டுகளாக இந்த அரசு நிதி உதவி பள்ளி இயங்கி வருகின்றன.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு ஆங்கில வழி கல்வியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

திடீரென இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி இல்லை, தமிழ் வழி கல்விதான் என்று ஆங்கில வழி புத்தகம் தராமல் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் தமிழ் வழி கல்வி புத்தகத்தை மாணவர்களுக்கு தந்துள்ளாராம்.

இந்த புத்தகத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாங்க மறுத்துவிட்டனர். மேலும் மாணவர்களின் பெற்றோர் கடந்த மூன்று நாட்களாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்து வருகின்றனர்.

இதனால் பள்ளியில் ஒரு மாணவ மாணவியர் கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இது சம்பந்தமாக பெற்றோர்கள் தெரிவிப்பது; கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில் கல்வி படித்து வந்தனர். இந்த ஆண்டு திடீரென்று தமிழ் வழி கல்வி கற்றுத் தரப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை, இதனால் எங்களது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் தலையிட்டு இப்ப பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது