தேன்கூட்டை கலைத்த பிளஸ் 1 மாணவன், தூக்குப்போட்டு தற்கொலை..

தேன்கூட்டை கலைத்த பிளஸ் 1 மாணவன், தூக்குப்போட்டு தற்கொலை..
X
தேன்கூட்டை கலைத்த பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார், காரணமறிந்த மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் நிஹோ காந்தி (வயது 16), வடமாதிமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தேன்கூடு இருந்தது. அதனை மாணவன் நிஹோகாந்தி கலைக்க திட்டமிட்டார். அதன்படி மின்சாரத்தை நிறுத்திவிட்டு தேன்கூட்டை கலைக்க செய்தார்.

தேனீக்கள் பறந்ததால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் அவர்கள் மாணவர் நிஹோகாந்தியை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நிஹோகாந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதனை பார்த்தவர்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துமனைக்கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது நிஹோகாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து களம்பூர் போலீசில் தாயார் ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!