/* */

தெரு விளக்கு எரியாததால் மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

ஆரணி அருகே தெரு விளக்கு எரியாததால் மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

தெரு விளக்கு எரியாததால் மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி   போராட்டம்
X

ஆரணி அருகே  தெருவில் உள்ள மின் கம்பங்களில் தீ பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அம்மா பாளையத்தில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள ஏ.எஸ்.ஆர் நகர், காமராஜ் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதிகளில் சுமார் 6மாதத்திற்கும் மேலாக தெரு மின்விளக்குகள் எரியவில்லை.இதனால் இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்படுவதாகவும், பாம்பு, தேள் போன்றவை ஊடுருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிட குடியிருப்பு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வீட்டில் மின் விளக்கை அணைத்துவிட்டு, தெருவில் உள்ள மின் கம்பங்களில் தீ பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 27 May 2022 1:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு