நெசவு தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரம் பறிப்பு
மாதிரி படம்
திருவண்ணாமலை அருகே தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 46). நெசவு தொழிலாளி. இவருக்கு ஜானகி என்ற மனைவியும், 2 மகள், 1 மகன் உள்ளனர்.
இவர் ஆரணியில் வேலை செய்து வருகிறார். வேலைக்கு சென்று விட்டு பாலாஜி சம்பள பணத்துடன் சொந்த கிராமத்திற்கு செல்வதற்கு ஆரணி பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதனை பயன்படுத்தி பாலாஜியின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.30 ஆயிரத்தை பிளேடால் அறுத்து மர்ம நபர் திருடி சென்றான்.
பணத்தை பறிகொடுத்த தொழிலாளி, சம்பளத்தை இழந்ததால் கதறி அழுதுள்ளார். பின்னர் ஆரணி டவுன் போலீசில் பாலாஜி புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கொண்டு பணத்தை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu