ஆரணியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி

ஆரணியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி
X

மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கிய சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ

ஆரணியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை சிலம்பம் அறக்கட்டளை சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது.

இப் போட்டியில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை ஆரணி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிலம்பம் அறக்கட்டளை நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டபூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

ஆரணி டவுன் பகுதியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 850 மாணவிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இங்கே போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆரணி சட்டமன்ற உறுப்பினரிடம் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகள் வைத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் நபார்டு திட்டத்தின் மூலமும் சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலமும் ரூபாய் ஒரு கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு அடுக்கு மாடிகளை கொண்ட எட்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் ஆரணி நகர மன்ற உறுப்பினர்கள் , தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ,நகராட்சி ஊழியர்கள் ,மாவட்ட கல்வி அதிகாரிகள், கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....