கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் முறைகேடு: 3 பேர் தற்காலிக பணி நீக்கம்

கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் முறைகேடு:  3 பேர் தற்காலிக பணி நீக்கம்
X

மாதிரி படம் 

ஆரணி நகர கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளுக்கு கடன் வழங்கிய முறைகேடு தொடர்பாக வங்கி பணியாளர்கள் 3 பேர் தற்காலிக பணி நீக்கம்

ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.2.51 கோடி கடன்பெற்று மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 77 நபர்களுக்கு போலி நகைகளுக்கு கடன்கள் வழங்கியதாக ஆரணி வங்கி பணியாளர்கள் 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போலி நகைகளுக்கு கடன் வழங்க உறுதுணையாக இருந்த வங்கி பணியாளர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆரணி இணைப்பதிவாளர், கூட்டுறவுத்துறைக்கு அறிக்கை அளித்துள்ளார். முறைகேடு தொடர்பான செய்யாறு துணைப்பதிவாளர் விசாரணை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story