திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

வருவாய் அலுவலா்களுக்கு கேரம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் அலுவலா்களுக்கு பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க மாவட்ட ஆட்சியா் முருகேஷ் உத்தரவின் பேரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டன.
தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் பணி சுமையின் காரணமாக சோர்வடையும் நிலை ஏற்படுகிறது.
அவர்களுக்கு சுறுசுறுப்பு ஏற்படுத்தும் வகையில் ஆரணி வருவாய் கோட்டத்துக்குட்பட்ட அனைத்து வருவாய் அலுவலர்களுக்கு பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டன.
அதன் அடிப்படையில் ஆரணியை அடுத்த இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக்கல்லூரி வளாகத்தில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
போட்டிகளை ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி தொடங்கி வைத்தாா். வருவாய் கோட்டாட்சியரின் நோமுக உதவியாளா் குமாரசாமி வரவேற்றாா். வயதுக்கேற்ப கேரம் விளையாட்டுப் போட்டியும், சதுரங்கப் போட்டியும் நடைபெற்றது. இதில், ஏ.சி.எஸ். கல்விக் குழும உடற்கல்வி இயக்குநா்கள் நடுவராக இருந்து சிறப்பிடம் பெற்றவா்களை தேர்வு செய்தனா்.
ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய ஆகிய வட்டங்களைச் சேர்ந்த வட்டாட்சியா்கள் மஞ்சுளா, ராஜராஜேஸ்வரி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள் செந்தில், பாலாஜி, வட்ட வழங்கல் அலுவலா்கள் வெங்கடேசன், அருள், ஜெகதீசன், மண்டல துணை வட்டாட்சியா்கள் தரணி குமரன், பிரியா, மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மே 7 வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. வருகிற ஏப்.29, 30 ஆகிய தேதிகளில் கிரிக்கெட், பூப்பந்து, வாலிபால், கபடி, குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
தொடா்ந்து, மே 7-ஆம் தேதி நடைபெறும் நிறைவுப் போட்டியின் போது மாவட்ட ஆட்சியா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளதாக கோட்டாட்சியா் தெரிவித்தாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu