திருவண்ணாமலை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் தடுப்பூசி முகாம்
X

 தடுப்பூசி முகாம்  ( கோப்பு படம் )

திருவண்ணாமலை மாவட்டத்தில், மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இன்று, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில், 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமான இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள், மூலம் ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், ஆரணி நகராட்சி சார்பில், நகராட்சி ஆரம்பப் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுதா முன்னிலையில் , செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குனர் பிரியா ராஜ் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில், பொதுமக்கள் காலை முதலே ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..! | How To Stop Anxiety Instantly In Tamil