ஆரணியில் ஆா்.எஸ்.எஸ். பேரணி பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி. ஆய்வு
ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ் பி ஆய்வு செய்தார்
ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் சார்பாக அணிவகுப்பு பேரணி நடத்திட தமிழக முழுவதும் நீதிமன்றம் மூலம் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் மூலம் அனுமதி பெறப்பட்டு (இன்று) தமிழக முழுவதும் உரிய பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அணிவகுப்பு பேரணி நடத்த முடிவு பெற்றது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி அளவில் ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானத்தில் இருந்து சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 300 நபர்கள் பேண்ட் வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொசப்பாளையம் சுந்தரம் தெரு, நேஷனல் டாக்கீஸ் சாலை, தச்சூர் சாலை, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள என்.மகாலில் நிறைவு செய்து அங்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் பேரணி செல்லும் பாதைகளை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காந்தி ரோட்டில் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், தடுப்பு வேலிகள் எங்கு அமைக்கப்பட வேண்டும், கயிறுகள் எங்கு அமைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளர் சுந்தரேசன் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.
ஆரணி நகர காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி வாழ்த்து
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைப்பதற்காக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வழக்குகள் விசாரணையை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்.
அதன் பேரில் ஆரணி நகர காவல் நிலையத்தின் முகப்பில் எல்.1 நகர ஆரணி நகர காவல் நிலையம் என எல்.இ.டி.லைட் மூலம் முகப்பு பெயர்ப்பலகையும், ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர்கள் அறை, வரவேற்பாளர்கள் அறை, புகார் மனு தர வருபவர்களுக்கு இருக்கை பகுதி, கணினி அறை, ஆண் கைதி அறை, பெண் கைதி அறை, பதிவு அறை, நீதிமன்ற ஆவணங்கள் வைக்கும் அறை, ஓய்வறை ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில் ஆரணி டவுன் காவல் ஆய்வாளர் கோகுல் ராஜன் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.
இதனை சென்னையில் இருந்து பதிவு ஆவண மதிப்பீட்டாளர்கள் மூலம் ஆய்வு செய்து அங்கீகரித்தனர். இதனையடுத்து மதிப்பீட்டாளர்கள் கார்த்திகேயன், வனிதா ஆகியோர் ஆரணி நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கோகுல் ராஜிடம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழனை வழங்கினர். அப்போது ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர்கள்சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன் உள்பட காவல்துறையினர் இருந்தனர்.
இந்நிலையில் ஆரணி நகர காவல் நிலையத்திற்கு வருகை தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பணியில் இருந்த காவலர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu