ஆரணி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

ஆரணி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
X

ஆரணி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்

ஆரணி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், இன்று ஆரணி நகர காவல் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் ஆரணி உட்கோட்டத்திற்க்குட்பட்ட ஆரணி நகர காவல் நிலையம், ஆரணி கிராமிய காவல் நிலையம் மற்றும் களம்பூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மூன்று காவல் நிலைய வளாகத்திலும் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!