ஆரணியில் பட்டு ஜரிகை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் பட்டு ஜரிகை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
X

ஆரணியில் பட்டு ஜரிகை வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பால் பட்டு சேலைகள் விலை உயரும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

கைத்தறி பட்டு நூல் சரிகை உள்ளிட்டவைகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது ரத்து செய்யக்கோரி ஆரணியில் பட்டு ஜரிகை வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே நடைபெற்ற கைத்தறி பட்டு ஜரிகை ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா ராவ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணி பகுதியில் இத்தொழிலை நம்பி 30 ஆயிரம் குடும்பத்தினர் உள்ளனர். ஆகையால் மத்திய அரசு வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பால் பட்டு சேலைகள் விலை உயரும், அதனால் விற்பனை குறையும், நெசவாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில வணிகர் சங்கங்களின் பேரவை ஒருங்கிணைப்பாளர் ராஜா வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் செல்வராஜ் உள்பட நெசவாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil