ஆரணியில் சீட் பெல்ட் விழிப்புணா்வு ஊா்வலம்..!

ஆரணியில் சீட் பெல்ட் விழிப்புணா்வு ஊா்வலம்..!
X

விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்

சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, ஆரணியில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகன பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் துவக்கி வைத்தார்.

இதில் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது, வேகக்கட்டுப்பாட்டு பயணம் ,மஞ்சள் நிற முகப்பு விளக்குகள் பயன்படுத்துவது, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி இபி நகர் ஆற்றுப்பாலம் வழியாக ஆரணி முக்கிய வீதிகளில் வந்து சைதாப்பேட்டை பைபாஸ் சாலை வழியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முத்துலிங்கம், போக்குவரத்து அலுவலர்கள், வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறையின் செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் கருணாநிதி தலைமை வகித்தாா்.

வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். வந்தவாசி டிஎஸ்பி ராஜு பேரணியை தொடங்கிவைத்தாா்.

வந்தவாசி கோட்டை மூலையில் தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, தேரடி, காந்தி சாலை வழியாகச் சென்றது.

முன்னதாக, சாலையில் தலைக்கவசம் அணிந்து பயணித்த வாகன ஓட்டிக்கு பூச்செண்டு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டன.

பேரணியில் பங்கேற்ற காவல் உதவி ஆய்வாளா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக ஊழியா்கள், ஓட்டுநா் பயிற்சி நிறுவன ஊழியா்கள் தலைக்கவசம் அணிந்தபடி இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து உதவி ஆய்வாளா்கள், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள், போக்குவரத்து அலுவலர்கள், வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....