கண்ணமங்கலம் அருகே பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

கண்ணமங்கலம் அருகே பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
X

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பள்ளி மேலாண்மைக் குழு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

கண்ணமங்கலம் அருகே ராமசாணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

கண்ணமங்கலம் அருகே ராமசாணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேல், ஊராட்சி மன்றத் தலைவர் பா. மகேஸ்வரி பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர்தா மரைச்செல்வி வரவேற்றார்.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக வாசுகி, துணைத் தலைவராக பி.பி.உதயகுமார் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து பள்ளி மேலாண்மைக் குழு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பள்ளி மேலாண்மைக் குழு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சமூக ஆர்வலர் பிரபாகரன் ஏற்பாடு செய்தார்.இவ் விழாவில் ஆசிரியர்கள் சுமதி, கீதா, முரளீதரன், ஆசிரியைகள் வினிதா, ஜெயந்தி, துர்கா, பவானி ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் பங்கு பெற்ற வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், சத்துணவு ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் பள்ளி மேலாண்மை் குழு உறுப்பினர்கள், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!