2 மாதங்களில் ஓய்வு பெற உள்ள பள்ளி ஆய்வக உதவியாளர் போக்சோ சட்டத்தில் கைது
பைல் படம்.
மாணவிகளிடம் தவறாக நடந்த குன்னத்தூர் அரசு மேல்நிலை பள்ளி ஆய்வக உதவியாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குன்னத்தூர் கிராமத்தினை சுற்றியுள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக நந்தினி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அப்பள்ளியில் நூலக உதவியாளராக பணியாற்றி வரும் கோவிந்தராஜ் (வயது 60). பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் சீன்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
ஆய்வக அறையிலும், நூலகத்திற்கும் வந்திருந்த மாணவிகளிடம் அவர் மடியில் அமரும்படி கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியை நந்தினியிடம் கூச்சலிட்டனர். தலைமை ஆசிரியை அவருக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் ஆசிரியரை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் சோமந்தாங்கல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கோவிந்தசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் கோவிந்தசாமியை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிந்தசாமி இன்னும் 2 மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ளார். இவர் இப்பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வேலை செய்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பெற்றோர்கள் கூறுகையில் பள்ளி என்பது பாதுகாப்பான இடம் என்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை நம்பி அனுப்புகிறோம் பள்ளியில் இது போன்ற செயல்கள் ஈடுபட்டால் நாங்கள் என்ன செய்வது என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் கேள்வி எழுப்பினர்..
புகையிலை பொருட்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் மரகதம் (வயது 70). இவரது வீட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை அறை எடுத்து பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் சென்று சோதனை நடத்தி ரூ.78 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மரகதம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடையவர் யார் என விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu