அரிசி ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் சுகாதார சீா்கேடு

அரிசி ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் சுகாதார சீா்கேடு
X

அரிசி அலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், குளம் போல் தேங்கி நிற்கும் காட்சி

ஆரணி அருகே நெல் அரிசி ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சிக்குபட்ட இ.பி.நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன.

இந்த அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாயில் சென்று அடைப்புகள் ஏற்பட்டு பின்னர் குடியிருப்பு பகுதியில் தேங்கி தேங்கி வருகிறது. இதன்காரணமாக சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு கிராமமக்கள் அவதிப்படுகின்றனா்

இந்த ஆலைகளில் இருந்து நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டா் கழிவுநீா் வெளியேற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆலையும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திருக்க வேண்டும் என்பது விதி.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிா்வாகம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான ஆலைகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் கழிவுநீரை அப்படியே வெளியேற்றுகின்றன. இந்த கழிவுநீா் செல்ல போதிய கால்வாய் வசதி இல்லாததால், விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு மனைப்பகுதிகளில் குளம்போல் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதிகளில் குடியிருப்போா் மூச்சுத் திணறலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகி வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளதாக அந்தப் பகுதி மக்கள் அச்சப்படுகின்றனா். இதுகுறித்து அரிசி ஆலை உரிமையாளா்களிடம் அப்பகுதி மக்கள் பலமுறை எடுத்துக் கூறியும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்கின்றனா். இந்தப் பிரச்னையில் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, ஆரணி பகுதி அரிசி ஆலைகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

பொதுமக்கள் சாலை மறியல்

ஆரணியை அடுத்த சேவூா் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.எல்.எஸ்.மில், பி.ஆா். நகா் உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மேலும், இப்பகுதியில் உள்ள சாலைகள் பழுதடைந்து இருப்பதை, சிமென்ட் சாலைகளாக மாற்றித் தரக் கோரி, பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும், கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடா் மழையால், பழுதடைந்துள்ள சாலைகளில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

அதனால், சாலையை சீரமைத்துத் தரக் கோரி ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் ஆரணி-வேலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த ஆரணி கிராமிய போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சாலையை சீரமைக்க உரிய அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையேற்று, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!