ஆரணியில் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மறியல்

ஆரணியில் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மறியல்
X

நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

5 மாத நிலுவை சம்பளனத்தை வழங்கக்கோரி ஆரணியில் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி நகராட்சியில் 1 முதல் 18 வார்டு வரை தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 116 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு 5 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பள பாக்கி கேட்டு அவர்கள் ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆரணி டவுண்காவல் உதவி ஆய்வாளர் சுந்தரேசன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் எதுவாக இருந்தாலும் நகராட்சி அலுவலகத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தி முடியுங்கள். இதுபோன்று சாலை மறியலில் ஈடுபட்டால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கூறி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து சென்ற அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள்போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் ஒப்பந்த பணியாளர்களிடம் அலுவலர்கள் கூறுகையில், உங்களுக்கு சம்பளம் நாங்கள் தர வேண்டியது இல்லை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றனர். பின்னர் தனியார் ஒப்பந்ததாரர் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் சம்பளம் வழங்கப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!