ஆரணியில் குடிநீா் கேட்டு கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

குடிநீர் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு, மனு கொடுக்க வந்த பொதுமக்கள்.
ஆரணி நகராட்சி 1-ஆவது வாா்டைச் சேர்ந்த பெரியாா் நகா் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படவில்லையாம். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து குடிநீா் கேட்டு மனு கொடுத்தனா்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனா். இந்நிலையில், ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் ஆண்களும், பெண்களும் சென்று குடிநீா் கேட்டு முற்றுகை யிட்டனா்.
மேலும் ஒரு மாதமாகியும் தங்கள் பகுதியில் குடிநீா் விநியோகம் இல்லை என முறையிட்டனா். இந்தப் பிரச்னையில், உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்கள் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்றனா். இதில், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் உறுதியளித்ததன்பேரில் அனைவரும் கலைந்துசென்றனா்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் எடை மோசடியைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், வேட்டவலம் நகரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இயங்கி வருகிறது.
இந்த விற்பனைக் கூடத்துக்கு வேட்டவலம், ஆவூா், ராஜந்தாங்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக எடுத்து வருகின்றனா். இங்கு எடை மோசடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில், விவசாயிகள் எடுத்து வந்த நெல்லை எடை போடும்போது ஒரு மூட்டைக்கு 2 முதல் 3 கிலோ வரை எடை மோசடி நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகளுக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனா்.தகவலறிந்து வந்த சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் வேல்மாறான், மாவட்ட துணைத் தலைவா் ரஜினி, நிா்வாகிகள் ஏழுமலை, செந்தில் உள்பட சங்க நிா்வாகிகள் வந்து எடை மோசடியைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, விற்பனைக் கூட அதிகாரிகள் விவசாயிகள் சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இனிவரும் காலங்களில் எடை மோசடி நடைபெறாலம் பாா்த்துக் கொள்வதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu