ஆரணியில் செல்போன் கடையில் கொள்ளை

ஆரணியில் செல்போன் கடையில் கொள்ளை
X

செல்போன் கடையில் சிதறி கிடக்கும் பொருட்கள்

ஆரணியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் செல்போன்கள், உதிரிப்பாகங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி ரோடு பி.ஜி.என்.காம்ப்ளக்சில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீப்சிங் (வயது 28) என்பவர் செல்போன் மற்றும் செல்போன்களுக்கான உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். காலை கடையை திறக்க வந்த போது, கடையின் முகப்பில் உள்ள கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. காம்ப்ளக்சில் உள்ள அவரது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. மேலும் கடையில் இருந்த பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான செல்போன்களும், செல்போன்களுக்கான உதிரிப்பாகங்களையும் மா்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

அந்த செல்போன்களை வைத்திருந்த அட்டைப்பெட்டிகள் கீழே சிதறி கிடந்தன. இதுகுறித்து தீப்சிங் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெஸ்டர் ரகு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் தடயங்களை சேகரித்து, கைரேகையை பதிவு செய்தனர். காந்தி ரோட்டில் ஒரு சில கடைகளின் முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!