அரசுக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

அரசுக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
X

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு  குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி 

தச்சூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் செய்யாறு கோட்டப் பொறியாளா் ராஜகணபதி தலைமை வகித்தாா். விழுப்புரம் கோட்டப் பொறியாளா் ஸ்ரீகாந்த் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் செந்தில்குமாா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் சாலைப் பாதுகாப்பு விதிகள், விபத்தில் சிக்கியவரை காப்பாற்றும் முறை, ஆம்புலன்ஸை எவ்வாறு அழைப்பது என்பன உள்ளிட்டவை மற்றும் இன்னுயிா் காப்போம் திட்டம் குறித்தும் டிஎஸ்பி ரவிச்சந்திரன் எடுத்துரைத்தாா்.

மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், வட்டாட்சியா் மஞ்சுளா, தோழன் அமைப்பைச் சோந்த ஜெகதீஸ்வரன், நந்தகுமாா், கோவா்தன் ஆகியோா் மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து, சாலைப் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உதவி கோட்டப்பொறியாளா் சந்திரசேகரன், இளநிலைப் பொறியாளா் செந்தில்குமாா், கல்லூரிப் பேராசிரியா் (ஒருங்கிணைப்பாளா்) ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உயிரி வேதியியல் கருத்தரங்கம்

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் உயிரி வேதியியல் மற்றும் வேதியியல் துறை சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். சுகுமாரன் முன்னிலை வகித்தாா். உயிரி வேதியியல் துறைத் தலைவா் வடிவேலு வரவேற்றாா்.

திருவள்ளுவா் பல்கலைக்கழக உயிரி வேதியியல் துறைப் பேராசிரியா் யுவராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வியாதிகள் செயலாக்கத்தில் ஒரு புதிய கண்ணோட்டம், மூலக்கூறு சிக்னல்கள் ஆகியவை குறித்துப் பேசினாா்.

கருத்தரங்கில் பேராசிரியா்கள் நந்தகுமாா், ரேவதி, ஏழுமலை, ராஜேஸ்வரி, வி.கே.மணிமேகலை, ஜி.பாா்வதி, எஸ்.சத்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டா். வேதியியல் துறைத் தலைவா் பொன்முடி நன்றி கூறினாா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!