ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
X

ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஆரணியில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் போலீஸ் நிலையம் சார்பில் கோட்டை மைதானம் அருகில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை வசந்தா தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

விழிப்புணர்வு முகாமில், பள்ளி முடிந்ததும் மாணவர்கள் இடதுபுறமாக செல்ல வேண்டும், பஸ்சில் பயணிக்கும் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்யக்கூடாது.

இருசக்கர வாகனங்களை 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே ஓட்ட வேண்டும். இளம் சிறார்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்ட வேண்டாம். 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆசிரியரிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். புகையிலை பழக்கம் கண்டிப்பாக இருக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.முகாமில் ஆசிரியர்கள், போலீசார், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story