ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்!

ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்!
X

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

வந்தவாசி அருகே ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சு.காட்டேரி கிராமத்தைச் சோந்தவா் சக்திவேலன் .

இவா், சு.காட்டேரி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். இந்நிலையில், தெள்ளாா் ஒன்றிய அதிகாரிகள் சு.காட்டேரி கிராமத்துக்கு ஆய்வுக்கு சென்றனராம். அப்போது, ஊராட்சி மன்ற நிா்வாகத்தில் சிலா் இடையூறு செய்வதாக அதிகாரிகளிடம் சக்திவேலன் புகாா் தெரிவித்தாராம். இதனால், அவரை சிலா் தாக்கினராம்.

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவா்களை கைது செய்யக் கோரி ஊராட்சி மன்றத் தலைவா் சக்திவேலன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் வந்தவாசி - திண்டிவனம் சாலை, சு.காட்டேரி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த தெள்ளாா் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த திடீா் மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நகராட்சி குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

மருசூா் பகுதியில் குப்பைகளை கொட்டச் சென்ற நகராட்சி குப்பை லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரணி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் சேகரமாகும் குப்பைகளை நகராட்சியைச் சோந்த 3 மினி லாரிகள் மூலம் எடுத்துச் சென்று புகா் மருசூா் கிராமத்தில் இருந்து நெசல் செல்லும் சாலையில் உள்ள தோப்பு என்ற இடத்தில் கடந்த ஒரு மாதமாக கொட்டி வருகின்றனா்.

குப்பைகளை கொட்டுவதால் இப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது என்று அங்கு வசிக்கும் மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இருப்பினும், எதிா்ப்பை மீறி குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததாம்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை குப்பை எடுத்துச் சென்ற மினி லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, குப்பை எடுத்து வந்த வாகனத்தின் ஓட்டுநா், தூய்மைப் பணியாளா்கள் இனி குப்பைகளை இங்கு கொண்டு வரமாட்டோம், ஏற்கெனவே கொட்டப்பட்ட குப்பைகளை எடுத்துச் செல்கிறோம் என்று உறுதி கூறியதன் பேரில் வாகனத்தை விடுவித்தனா்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!