ஆரணியில் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

ஆரணியில் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
X

ஆரணியில் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலக ஆளுகைக்கு உட்பட்ட ஆரணி, சேத்துப்பட்டு, போளூர் தாலுகா பகுதியில் செயல்படும் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற வாகனங்களின் ஆண்டாய்வுக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன், ஆரணி வட்டாட்சியா் ரா. மஞ்சுளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக ஆரணி உதவி ஆட்சியா் தனலட்சுமி, டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோா் பங்கேற்று ஆய்வு செய்தனா்.

ஆரணி, போளூா், சேத்துப்பட்டு வட்டங்களில் உள்ள 48 தனியாா் பள்ளிகளின் 355 பேருந்துகள் மற்றும் வேன்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. வாகனங்களில் குழந்தைகள் ஏறும் வகையில் படிக்கட்டுகள் தாழ்வாக உள்ளனவா, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா, அவசரகால வழி முறையாக செயல்படுகிா, என ஆய்வு செய்யப்பட்டன.

தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறையினரால் பள்ளி வாகனங்களில் தீ பிடிக்கும் நிலை ஏற்பாடுமாயின் தீயினை கட்டுப்படுத்தப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்சு இயக்கும் பணியாளர்களால் முதலுதவி குறித்த நடவடிக்கைகள் குறித்த செய்முறை செய்து காணப்பிக்கப்பட்டது.

ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் சுகுமார், ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு போக்குவரத்து) பூபாலன், செய்யாறு கல்வி மாவட்ட கல்வி அலுவலக அலுவலர் மலைவாசன், தனியார் பள்ளி தாளாளர்கள் மேலாளர்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் கல்வி , போக்குவரத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai solutions for small business