பெரணமல்லூர் அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த விவசாயி மீட்பு

பெரணமல்லூர் அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த விவசாயி மீட்பு
X

கிணற்றில் விழுந்து தத்தளித்த விவசாயி மீட்பு ( மாதிரி படம்)

பெரணமல்லூர் அருகே கிணற்றில் விழுந்து 2 மணி நேரமாக தத்தளித்துக்கொண்டிருந்த விவசாயியை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பெரணமல்லூர் அருகே கிணற்றில் 2 மணி நேரம் தத்தளித்துக்கொண்டிருந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி , விவசாயி.

இவர் தனக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் உள்ள நீர்மூழ்கிக் மோட்டார் பம்பினை சரி செய்ய கயிறு மூலம் கட்டி மேலே இழுக்க முயன்றார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் முறையாக படி வசதி இல்லாததால் அவர் மேலே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து அவரது மகன் பெரணமல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதனடிப்படையில், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் 2 மணிநேரமாக தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த விவசாயி சுப்பிரமணியை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

போர்வெல் கிணற்றில் விழுந்து உயிரிழந்த வழக்கில், நில உரிமையாளருக்கு, 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம்

போர்வெல் கிணற்றில் விழுந்து உயிரிழந்த வழக்கில், நில உரிமையாளருக்கு, 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்து ஆரணி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 2013 ஆம் ஆண்டு புலவன் பாடி கிராமத்தைச் சேர்ந்த மலர்கொடி பழனி தம்பதியினர் மகள் தேவி என்ற சிறுமி தனது தாய் மலர்கொடி விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அருகில் உள்ள சங்கர் என்பவரின் நிலத்தில் மூடாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுமி தேவி தவறி விழுந்து பல கட்ட போராட்டத்தின் பின்பு சடலமாக வருவாய்த்துறையினர் மீட்டெடுத்தனர்.

இதை அடுத்து மலர்க்கொடி கொடுத்த புகாரின் பேரில் களம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு 11 ஆண்டுகளாக ஆரணி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நிலத்தின் உரிமையாளர் சங்கர் என்பவருக்கு 10 ஆண்டு தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா தீர்ப்பு வழங்கினார் .

தமிழகத்தில் முதல் முறையாக, போர்வெல் கிணற்றில் விழுந்து உயிரிழந்த வழக்கில், நில உரிமையாளருக்கு, 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....