ரெட் கிராஸ் சங்கம் சார்பில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரம்

ரெட் கிராஸ் சங்கம் சார்பில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரம்
X

திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சங்கம் சார்பாக வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரம்

திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சங்கம் சார்பில் நிமோனியா பாதிப்பு உள்ளவருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரம் வழங்கப்பட்டது

பெரணமல்லூர் அடுத்த மோசவாடி கிராமத்தில் கோவிட் 19 மற்றும் நிமோனியா பாதிப்பால் நுரையீரல் சுருங்கிய நிலையில் உள்ள திவ்யா என்பவருக்கு மனித நேய அடிப்படையில் தமிழ்நாடு மாநில ரெட் கிராஸ் சங்கம் அனுப்பிய 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 1.5 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரம் திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் முனைவர் பா. இந்திரராஜன் தலைமை வகித்தார். பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம‌ ஊராட்சிகள்) ஆர். ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊரக வளர்ச்சி) பி. பரணிதரண் வழங்கினார்.

இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரமானது மோசவாடியில் நோயாளியின் வீட்டிற்கே நேரில் சென்று பொருத்தப்பட்டது. இயந்திரத்தை பெற்றுக் கொண்ட திவ்யா குடும்பத்தினர் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!