திருவண்ணாமலையில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்.
திருவண்ணாமலை, மற்றும் ஆரணியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
முன்னாள் பாரதப் பிரதமர்,பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் 32-ம் ஆண்டு நினைவு தினம் இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மார்க்கெட் ரோட்டில் உள்ள காந்தி சிலை முன்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கும், காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நகர தலைவர் ஜெ.பொன்னையன் தலைமை தாங்கினார். தொடர்ந்து வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவது என்ற உறுதிமொழியையும், பயங்கரவாத உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. டி.பி.ஜெ.ராஜாபாபு, மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் வாசுதேவன் மற்றும் உதயகுமார், நகரசபை உறுப்பினர் மருதேவி பொன்னையன், முன்னாள் நகரசபை உறுப்பினர் செல்வம், ஆறுமுகம், குருமூர்த்தி, சம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு நகர தலைவர் செந்தமிழ் செல்வன் தலைமையில் மாவட்டத் தலைவர் செங்கம் குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் மணி ,கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் ,காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவது என்ற உறுதிமொழியையும், பயங்கரவாத உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu